மெல்போர்ன்,
'கிராண்ட்ஸ்லாம்' அந்தஸ்து கொண்ட ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் 1 வீரரான நோவக் ஜோகோவிச் (செர்பியா), நிஷேஷ் பசவரெட்டியுடன் (அமெரிக்கா) பலப்பரீட்சை நடத்தினார்.
இதில் முதல் செட்டை பசவரெட்டி கைப்பற்றி ஜோகோவிச்சுக்கு அதிர்ச்சி அளித்தார். பின்னர் சுதாரித்து விளையாடிய ஜோகோவிச் அடுத்த 3 செட்டுகளை கைப்பற்றி வெற்றி பெற்றார். இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் 4-6, 6-3, 6-4 மற்றும் 6-2 என்ற செட் கணக்கில் போராடி வெற்றி பெற்று 2-வது சுற்றுக்குள் நுழைந்துள்ளார்.
இவர் 2-வது சுற்றில் ஜெய்ம் பாரியா உடன் மோத உள்ளார்.