ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்; காயம் காரணமாக விலகிய ஜோகோவிச்... இறுதிப்போட்டிக்கு முன்னேறிய ஸ்வெரேவ்

4 hours ago 2

மெல்போர்ன்,

'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரர்களான நோவக் ஜோகோவிச் (செர்பியா) - அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி) ஆகியோர் மோதினர்.

இந்த போட்டியின் முதல் செட்டை 7-6 (7-5) என்ற புள்ளிக்கணக்கில் ஸ்வெரேவ் போராடி கைப்பற்றினார். பின்னர், 2வது செட் ஆட்டம் தொடங்கும் முன்னர் ஜோகோவிச் இடது தொடையில் ஏற்பட்ட காயத்தால் போட்டியில் இருந்து வெளியேறினார். இதன் காரணமாக ஸ்வெரேவ் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

இன்று நடைபெறும் மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் ஜன்னிக் சின்னெர் (இத்தாலி) - பென் ஷெல்டன் (அமெரிக்கா) ஆகியோர் மோத உள்ளனர். இந்த ஆட்டத்தில் வெற்றி பெறுபவர் இறுதிப்போட்டியில் ஸ்வெரேவ் உடன் மோதுவார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Read Entire Article