
பாலிவுட் சினிமாவில் பெரிய ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் திஷா பதானி. இவர் கடந்த ஆண்டு 3 படங்களில் நடித்திருந்தார். அதன்படி, பிரபாசுடன் கல்கி 2898 ஏடி, சூர்யாவுடன் கங்குவா மற்றும் சித்தார்த் மல்கோத்ராவுடன் யோதா ஆகிய படங்கள் ஆகும்.
ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன் போன்ற பாலிவுட் நடிகைகள் ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளனர். அந்த வகையில், தற்போது திஷா பதானியும் நடிக்க இருப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.
திஷா பதானி ஏற்கனவே ஜாக்கிசானுடன் 'குங்பூ', 'யோகா' என்ற ஹாலிவுட் படத்தில் நடித்திருந்தார். தற்போது மீண்டும் 'ஹாலிகார்ட்ஸ்' என்ற ஆக்சன், திரில்லர் படத்தின் மூலம் மீண்டும் ஹாலிவுட் படத்தில் நடிக்க இருக்கிறார்.
படத்தை ஆஸ்கார் விருது பெற்ற இயக்குனர் கெவின் ஸ்பேசி இயக்கி இருக்கிறார். படத்தில் டால்ப் லண்ட்கிரென், டைரஸ் கிப்சன், பிரியானா ஹில்ட்பிராண்ட் ஆகியோர் நடிக்கின்றனர். கடந்த ஜனவரி மாதம் நடந்த படத்தின் முன்னோட்ட பகுதி மெக்சிகோ டுரோங்காவில் படமாக்கப்பட்டது. படத்தின் காட்சிகள் வெளியாகி பிரமிக்க வைத்தன. இவர் பாலிவுட்டில் 'வெல்கம் டு தி ஜங்கிள்' படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.