நெல்லை, மே 5: நாங்குநேரி மேற்கு ஒன்றிய திமுக சார்பில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சியின் 4 ஆண்டு சாதனை விளக்க துண்டு பிரசுரம் வழங்கல் மற்றும் திண்ணை பிரசாரம் நாங்குநேரி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் ஆர்.எஸ்.சுடலைக்கண்ணு தலைமையில் ஆழ்வாநேரி ஊராட்சி புதுகுறிச்சியில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மாவட்ட பிரதிநிதி வானுமாமலை, மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் மாயகிருஷ்ணன், ஒன்றிய செயற்குழு உறுப்பினர் ரவி உடையார், இளைஞரணி அமைப்பாளர் குமார், பொறியாளர் அணி அமைப்பாளர் பாரத், விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் வர்கீஸ், சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் கோமதி சங்கர், ஒன்றிய பிரதிநிதிகள் பரமசிவம், ஜோ, கிளை செயலாளர்கள் பலவேசம், கோயில் பிச்சை, பரமசிவம், இளைஞர் அணி பாக பொறுப்பாளர் ஷாம் மற்றும் பொதுமக்கள் உள்பட கலந்து கொண்டனர்.
The post ஆழ்வாநேரி ஊராட்சியில் திமுக அரசின் சாதனை விளக்க துண்டு பிரசுரம் வழங்கல் appeared first on Dinakaran.