“ஆளுநரின் செயலில் அரசியல் உள்நோக்கம் இருக்கிறது” - பேரவையில் முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

2 hours ago 4

சென்னை: சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் பதிலுரை அளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், “ஆளுநரின் செயலில் அரசியல் உள்நோக்கம் இருக்கிறது” என்று குற்றஞ்சாட்டினார்.

தமிழக சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் ஜனவரி 6-ம் தேதி தொடங்கியது. அலுவல் ஆய்வுக்குழு முடிவின்படி, ஜனவரி 9 ஆம் தேதி முதல் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நேற்று (10-ம் தேதி) வரை விவாதம் நடைபெற்றது. இறுதி நாளான இன்று, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் பதிலுரை அளித்தார்.

Read Entire Article