சிவகங்கை: சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் எம்பி நேற்று அளித்த பேட்டி: உள்துறை அமைச்சர் அமித்ஷா, மனுஸ்மிருதியின் கருத்தை பிரதிபலிக்கிறார் என்து வெளிப்படையாக தெரிகிறது. பாஜ, ஆர்எஸ்எஸ் எப்படி செயல்படுகிறது என்பது தெளிவாக தெரிகிறது. இதில் திரித்துக்கூற காங்கிரஸ் கட்சிக்கு அவசியம் இல்லை. மாநிலங்களவையில் அமித்ஷா பேசுவது முழுமையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மாநிலங்களவை டிவியிலும் இப்பதிவு உள்ளது. அதை பார்த்தாலே அவர் சொன்னது தெரியும். அவர் என்ன பேசினார் என்பது காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்ல. அனைவருக்குமே புரியும். இது காங்கிரஸ் கட்சியின் பிரச்னை அல்ல. மனித உரிமை பிரச்னை.
எனவே, அமித்ஷா மீது பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் பதவி விலக வேண்டும். காங்கிரஸ் கட்சி இதுகுறித்து தொடர் போராட்டங்கள் நடத்தும். தமிழ்நாட்டில் உள்ள ஆளுநர் வடகிழக்கு மாநிலத்தில் அமைதி பேச்சுவார்த்தையில் குழப்பத்தை ஏற்படுத்தியதால் அங்கிருந்து தண்டனை அடிப்படையில் இங்கு அனுப்பப்பட்டார். அப்படி இருந்தும் அவருடைய குசும்பு அடங்கவில்லை. அரசியல் சாசன கோட்டின் எல்லையை அவர் மீறிக்கொண்டே இருக்கிறார். இங்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு உள்ளது. அரசாங்கத்தை ஆளுநர் நடத்த வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படுவதால் அரசுக்கும் ஆளுநருக்கும் மோதல் போக்கு தொடர்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
The post ஆளுநரின் குசும்பு அடங்கவில்லை: கார்த்தி சிதம்பரம் எம்பி சாடல் appeared first on Dinakaran.