
சென்னை,
வளர்ந்து வரும் கன்னட நடிகை குஷி ரவி. 'தியா' என்ற கன்னட படத்தின் மூலம் புகழ்பெற்ற இவர், 'பிண்டம்' படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். தற்போது ''பட்டி' என்ற ஆல்பம் பாடல் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்திருக்கிறார்.
தீபா லக்சுமண் பிரபு தயாரிப்பில் சத்தியசீலன் இயக்கத்தில் உருவாகி உள்ள ஆல்பம் 'பட்டி'. இதில் தர்ஷன் மற்றும் குஷி ரவி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த ஆல்பம் தமிழ் மற்றும் தெலுங்கில் காதலர் தினத்தை முன்னிட்டு நேற்று வெளியானது.