ஆலந்தூர், ஆதம்பாக்கம் பகுதிகளில் நடைபெறும் வளர்ச்சி திட்டப்பணிகளை அமைச்சர்கள் நேரில் ஆய்வு: விரைந்து முடிக்க உத்தரவு

3 months ago 21

ஆலந்தூர்: ஆலந்தூர், ஆதம்பாக்கம் போன்ற பகுதிகளில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பாக பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு மற்றும் தா.மோ.அன்பரசன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். அப்போது, வீட்டு வசதி துறை செயலாளர் காகர்லா, ஆலந்தூர் மண்டல குழு தலைவர் என்.சந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

ஆதம்பாக்கம் பாலகிருஷ்ணாபுரத்தில் 20,000 சதுர அடியில் ரூ.5.65 கோடி மதிப்பீட்டில் நடந்து வரும் சமுதாய நலக்கூட பணிகள், ஆலந்தூர் புது தெருவில் 30 ஆயிரம் சதுர அடியில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் நடந்து வரும் சமுதாய நலக்கூடம் கட்டும் பணி, ஆதம்பாக்கம் ஏரியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரி, சீரமைக்கும் பணிகள் ஆகியவற்றை ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்கும்படி அதிகாரிகளை கேட்டுக் கொண்டனர்.

ஆய்வின்போது, ஆலந்தூர் மண்டல உதவி கமிஷனர் சீனிவாசன் செயற்பொறியாளர் பாண்டியன், உதவி செயற் பொறியாளர் ரவி ராஜன், கவுன்சிலர் பூம்பட்டி ஜெகதீஸ்வரன், முன்னாள் கவுன்சிலர்கள் குணாளன், ஏசுதாஸ், மனோகரன், பாபுகுமார், பாபு, நடராஜன், ஜெகதீஸ்வரன், ஏசுதாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post ஆலந்தூர், ஆதம்பாக்கம் பகுதிகளில் நடைபெறும் வளர்ச்சி திட்டப்பணிகளை அமைச்சர்கள் நேரில் ஆய்வு: விரைந்து முடிக்க உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article