ஆலத்தூர் செட்டிக்குளம் பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசி

2 hours ago 2

 

பாடாலூர், ஜன. 11: தமிழ் மாதங்களில் பக்தி மாதம் என்ற பெருமைக்குரியது மார்கழி. இந்த மாதத்தில் சுபகாரியங்கள் நடத்தப்படுவது இல்லை என்றாலும் கோயில்களில் அதிக அளவில் பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம்.
மார்கழியில் தான் வைகுண்ட ஏகாதசி விழாவாக பெருமாள் கோயில்களில் கொண்டாடப்படுகிறது. வைகுண்ட ஏகாதசியன்று இரவு முழுவதும் கண்விழித்து விரதம் இருந்து பெருமாளை வழிபட்டால் வைகுண்ட பதவியை அடையலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். நேற்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு செட்டிகுளம் தேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோயில், நாரணமங்கலம் தேவி பூதேவி, வரதராஜ பெருமாள், பாடாலூர் தேவி, பூமாதேவி சமேத வீற்றிருந்த பெருமாள் கோயில் உள்ளிட்ட கோயில்களில் அதிகாலையிலேயே சிறப்பு பூஜைகள் நடந்தது. குளிரையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் அதிகாலையிலேயே கோயில்களில் குவிந்து தரிசனம் செய்தனர்.

The post ஆலத்தூர் செட்டிக்குளம் பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசி appeared first on Dinakaran.

Read Entire Article