ஆலங்கட்டி மழையில் சிக்கி சேதம் இந்திய விமானம் தரையிறங்க அனுமதி மறுத்த பாகிஸ்தான்

1 day ago 6

புதுடெல்லி: டெல்லியில் இருந்து ஸ்ரீநகர் சென்ற பயணிகள் விமானம் ஆலங்கட்டி மழையில் சிக்கி அதன் மூக்கு பகுதி சேதமடைந்த நிலையில் பாகிஸ்தான் வான்வெளிக்குள் நுழைவதற்கு அந்நாடு அனுமதி மறுத்துள்ளது. டெல்லியில் இருந்து புதனன்று மாலை இன்டிகோ விமானம் பயணிகளுடன் ஸ்ரீநகர் புறப்பட்டுச்சென்றுள்ளது.

இதில் பயணிகள் உட்பட சுமார் 227 பேர் இருந்துள்ளனர். விமானம் பதன்கோட் அருகே ஆலங்கட்டி மழையின் காரணமாக மோசமான வானிலையை எதிர்கொண்டுள்ளது. மேலும் விமானத்தின் மூக்கு பகுதியில் சேதமடைந்துள்ளது. உடனடியாக விமானம் தரையிறங்க முடியாத நிலையில், விமானி பாகிஸ்தான் வான்பரப்பிற்குள் நுழைவதற்காக லாகூர் விமான போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையத்திடம் அனுமதி கோரியுள்ளார். ஆனால் இந்திய விமானம் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து மிகவும் சமார்த்தியமாக செயல்பட்ட விமானி மிக பாதுகாப்பாக விமானத்தை ஸ்ரீநகர் விமான நிலையத்தில் தரையிறக்கியுள்ளார். இது தொடர்பாக விமான கண்காணிப்பு அமைப்பான சிவில் விமான போக்குவரத்து இயக்குனரம் வெளியிட்டுள்ள அறிக்கையில், டெல்லியில் இருந்து ஸ்ரீநகர் சென்ற விமானம் ஆலங்கட்டி மழையை கடந்து பாதுகாப்பாக தரையிறங்கியது. விமானத்தில் இருந்த எந்த பயணிக்கும் காயமேற்படவில்லை\” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. விமானம் சேதம் அடைந்தது தொடர்பாக விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

The post ஆலங்கட்டி மழையில் சிக்கி சேதம் இந்திய விமானம் தரையிறங்க அனுமதி மறுத்த பாகிஸ்தான் appeared first on Dinakaran.

Read Entire Article