ஆற்றங்கரை கிராம பகுதியில் பழைய பள்ளி கட்டிடத்தை அகற்ற மக்கள் கோரிக்கை

1 month ago 4

மண்டபம்,பிப்.10: ஆற்றங்கரை ஊராட்சி அலுவலகத்தில் இயங்கி வரும் அங்கன்வாடி பள்ளி கட்டிடம் மற்றும் மேற்கூரை சேதமடைந்துள்ளதால், கட்டிடத்தை அகற்றி புதிய கட்டிடம் கட்ட அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆற்றங்கரை ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் அங்கன்வாடி பள்ளி கட்டிடம் இயங்கி வருகிறது. இந்த கட்டிட வளாகத்தில் 20க்கும் மேற்பட்ட சிறு குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த கட்டிடம் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதால் பழமை ஆகிவிட்டது. மேலும் கட்டிடத்தில் மேற்கூறை சிமெண்ட் ஓடுகளால் அமைக்கப்பட்டுள்ளது.

இதனால் இந்த சிமெண்ட் கோடுகள் பல்வேறு பகுதிகளில் சேதம் அடைந்து மழை காலங்களில் மழை நீர கட்டிடத்துக்குள் வழிந்து வகுப்பறையில் தேக்கமடையும். அதுபோல மாணவர்களுக்கு உணவு சமைக்கும் கூடாரம் மற்றும் உணவுப் பொருட்கள் வைக்கும் அறைகளிலும் மழை நீர் புகுந்து உணவு பொருட்கள் சேதம் அடைந்து பயன்படுத்த முடியாமல் விடும்.

அதுபோல மாணவர்களுக்கு மழை காலங்களில் சமைக்க முடியாமல் பொறுப்பாளர்கள் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர். ஆதலால் சேதமடைந்த கட்டிடங்கள் இடிந்து ஏதேனும் மாணவர்கள் மேலே விழுந்து விபத்துக்கள் உயிர் சேதங்கள் ஏற்படுவதற்கு முன்பு, அகற்ற வேண்டும். உடனே புதிய கட்டிடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post ஆற்றங்கரை கிராம பகுதியில் பழைய பள்ளி கட்டிடத்தை அகற்ற மக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article