“ஆர்எஸ்எஸ், பாஜக உறவால் மதசார்பின்மை சீர்குலைவு!” - மதுரை மார்க்சிஸ்ட் மாநாட்டில் மாணிக் சர்கார் சாடல்

22 hours ago 2

மதுரை: “ஆர்எஸ்எஸ் - பாஜகவின் வலுவான உறவால் மதசார்பின்மை, கூட்டாட்சி முறை சீர்குலைந்துள்ளது” என்று மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநாட்டில், அக்கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், திரிபுரா முன்னாள் முதல்வருமான மாணிக் சர்க்கார் குற்றம்சாட்டினார்.

மதுரையில் நடக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது அகில இந்திய மாநாட்டில் திரிபுரா மாநில முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார் பேசியது: “டொனால்டு ட்ரம்ப் அதிபராக பொறுப்பேற்ற பிறகு அமெரிக்க ஏகாதிபத்தியம் மேலும் உறுதியானதாக மாறியுள்ளது. இந்த நேரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இந்த மாநாடு நடக்கிறது. நமது ஏகாதிபத்திய எதிர்ப்பு பிரச்சாரம், போராட்டங்களை முடுக்கிவிட நாம் தயாராக இருக்கவேண்டும்.

Read Entire Article