ஆர்.கே.பேட்டையில் இலவச கண் பரிசோதனை முகாம்

7 months ago 31

 

ஆர்.கே.பேட்டை, அக்.14: திருத்தணி அடுத்த ஆர்.கே.பேட்டையில் திருவள்ளூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் உதவியுடன் ஆர்.கே.பேட்டை லயன்ஸ் சங்கம் மற்றும் சென்னை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தியது. கண்புரை, கண்அழுத்த நோய், குழந்தைகளின் கண் நோய், கிட்டப்பார்வை, தூரப்பார்வை, ரத்த அழுத்தம், ஆஸ்துமா, சர்க்கரை நோய், இதய நோய் போன்றவைகளுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

ஆர்.கே.பேட்டை சோளிங்கர் சாலையில் ஸ்ரீ பத்மாவதி மஹாலில் நடைபெற்ற இந்த முகாமிற்கு ஆர்.கே.பேட்டை லயன்ஸ் சங்க நிர்வாகிகள் தலைவர் மணிகண்டன், செயலாளர் மோகன்ராஜ், பொருளாளர் சேகர், ஆர்.கே. பேட்டை சந்திப்பு லயன்ஸ் சங்கம் சார்பில் தலைவர் சுரேஷ், செயலாளர் விஜயன், பொருளாளர் சேகர் மற்றும் நிர்வாகிகள் பரணி, ஜெகதீஷ், அன்பரசு, கோபால், குமார், பரணி குமார் உட்பட 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முகாமில், கலந்துகொண்ட 100 பேருக்கு இலவசமாக அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைக்கப்பட்டது. மேலும் 100 பேருக்கு இலவச கண்ணாடியும் வழங்கப்பட்டது.

The post ஆர்.கே.பேட்டையில் இலவச கண் பரிசோதனை முகாம் appeared first on Dinakaran.

Read Entire Article