ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் அதிமுக உறுப்பினர்களுக்கு புதிய உறுப்பினர் அட்டைகள்: மாவட்ட செயலாளர் வழங்கினார்

7 months ago 34

ஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் அதிமுக உறுப்பினர்களுக்கு புதிய அதிமுக உறுப்பினர் அட்டைகளை மாவட்ட செயலாளர் பி.வி.ரமணா வழங்கினார். திருவள்ளூர் மேற்கு மாவட்டம், ஆர்.கே.பேட்டை ஒன்றிய அதிமுக சார்பாக ஒன்றிய செயலாளர் நாகப்பூண்டி கோ.குமார் தலைமையில், நீலோத் பாலாபுரம், மீசரகாண்டபுரம், சானூர் மல்லாவரம், மைலார்வாடா, பெரிய ராமாபுரம், தாமனேரி, ஸ்ரீ காளிகாபுரம், பைவலசா, கீழ்பந்திக்குப்பம், உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் அதிமுக புதிய உறுப்பினர் அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இதில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.வி.ரமணா, அதிமுக அமைப்பு செயலாளரும், அரக்கோணம் முன்னாள் எம்பியுமான திருத்தணி கோ.அரி ஆகியோர் கலந்துகொண்டு, அதிமுக உறுப்பினர்களுக்கு புதிய உறுப்பினர் அட்டைகளை வழங்கி, ஆலோசனைகள் வழங்கி வாழ்த்தினர்.

நிகழ்ச்சியில் முன்னாள் ஆவின் சேர்மேன் வேலஞ்சேரி த.கவிச்சந்திரன், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் பொன்ரங்கம், மாவட்ட கவுன்சிலர் பாண்டுரங்கன், ஒன்றிய துணை செயலாளர் என்.அசோக், அவைத்தலைவர் ஜி.பெருமாள், ஒன்றிய பொருளாளர் ராஜீவ்காந்தி, மாவட்ட பிரதிநிதி ஜி.ஏழுமலை, வினோத், வேலு, பிரகாஷ், ஆறுமுகம், திருத்தணி பிரபாகரன், மகளிர் அணி வாசுகி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் அதிமுக உறுப்பினர்களுக்கு புதிய உறுப்பினர் அட்டைகள்: மாவட்ட செயலாளர் வழங்கினார் appeared first on Dinakaran.

Read Entire Article