ஆர்.எஸ்.மங்கலம், ஜன. 18: ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் புதிய போக்குவரத்து பணிமனை அமைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் வளர்ந்துவரும் நகரங்களில் ஆர்.எஸ்.மங்கலம் ஒரு முக்கிய நகரமாக விளங்குகின்றது இந்த ஊரை தலைமையிடமாக கொண்டு தனி தாலுகாவாகவும் செயல்பட்டு வருகிறது. இந்த ஊரை சுற்றி சுமார் 150க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது.
இப்பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் இங்கு ஒரு போக்குவரத்து பணிமனை அவசியமாக உள்ளது. இங்கு பணிமனை இல்லாததால் சுமார் 35 கி.மீ தூரமுள்ள ராமநாதபுரம் பணிமனை, சுமார் 40 கி.மீ தூரமுள்ள தேவகோட்டை பணிமனை, அதே போல் சுமார் 60 கி.மீ தூரமுள்ள சிவகங்கை பணிமனை மற்றும் சுமார் 45 கி.மீ தூரமுள்ள பரமக்குடி பணிமனைகள் மூலம் இப்பகுதிக்கு தேவையான அளவில் பேருந்து வசதியை ஏற்படுத்திக் கொடுக்க முடியாத நிலை உள்ளது.
மேலும் ஆர்.எஸ்.மங்கலத்தில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பணிமனை அமைந்தால், போக்குவரத்துத்திற்கு ஆர்.எஸ்.மங்கலம் நகரையே நம்பி இருக்கும் சுமார் 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இரவு நேரங்களிலும், அதிகாலை நேரங்களிலும் பெரிதும் பயனடைவார்கள். எனவே, ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் போக்குவரத்து பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் பொதுமக்களின் நலன் கருதி அரசு போக்குவரத்து கழகம் சார்பில் புதிதாக போக்குவரத்து பணிமனை அமைத்து தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post ஆர்.எஸ்.மங்கலத்தில் புதிய போக்குவரத்து பணிமனை அமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.