ஆரோவில்லில் பொங்கல் விழா: வெளிநாட்டவர் பங்கேற்று உற்சாக கொண்டாட்டம்!

11 hours ago 4

புதுச்சேரி: ஆரோவில்லில் நடைபெற்ற பொங்கல் விழாவில் ஏராளமான வெளிநாட்டினர் கலந்துகொண்டு பொங்கலிட்டு கும்மியடித்து உற்சாகமாக பொங்கலை கொண்டாடினர்.

தமிழர் திருநாளாம் தை திருநாள் பொங்கல் விழா இன்று தமிழர்கள் வசிக்கும் பகுதிகள் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மண்பானையில் பொங்கலிட்டு இயற்கைக்கும் சூரியனுக்கும் நன்றி செலுத்தும் விதமாக பாரம்பாரிய கலாச்சாரப் பொங்கல் விழாவானது ஆரோவில் அறக்கட்டளை சார்பாக ஆரோவிலுள்ள மோகனம் கலாச்சார பண்பாட்டு மையத்தில் கொண்டாடப்பட்டது.

Read Entire Article