ஆரிக்கம்பேடு பகுதியில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணி தீவிரம்

4 weeks ago 6


திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கன மழை கொட்டி தீர்த்தது. இந்த கனமழை காரணமாக திருவள்ளூர் நெடுஞ்சாலை துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டம், அம்பத்தூர் உட்கோட்டத்திற்குட்பட்ட வெள்ளானூர் – செங்குன்றம் சாலையில் ஆரிக்கம்பேடு பகுதியில் காட்டாற்று வெள்ளத்தால் சாலைகள் அரிப்பு ஏற்பட்டு சேதமடைந்தது. இதனையடுத்து நெடுஞ்சாலை கட்டுமானம், பராமரிப்பு மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் ஏ.வ.வேலு உத்தரவின் பேரில், திருவள்ளூர் கோட்டப் பொறியாளர் டி.சிற்றாசு மேற்பார்வையில், அம்பத்தூர் உதவி கோட்டப் பொறியாளர் ஜி.மகேஸ்வரன் தலைமையில், இளநிலை பொறியாளர் ராமச்சந்திரன் மற்றும் சாலை ஆய்வாளர்கள் சாலை பணியாளர்கள் சாலைகளில் ஏற்பட்ட அரிப்பில் மேலும் பாதிப்பு ஏற்படாத வண்ணம் மண்ணைக் கொட்டி சமப்படுத்தி சீரமைத்தனர்.

சாலையில் செல்லும்போது பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் நெடுஞ்சாலை துறை சார்பில் உடனுக்குடன் சாலைகளை சீரமைத்ததால் அப்பகுதி மக்கள் தமிழக அரசுக்கும், நெடுஞ்சாலைத் துறைக்கும் நன்றி தெரிவித்தனர்.

The post ஆரிக்கம்பேடு பகுதியில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Read Entire Article