ஆரல்வாய்மொழி, செப்.30: ஆரல்வாய்மொழி அறிஞர் அண்ணா கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் சார்பாக, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், கடந்த 25ம் தேதி முதல் 28ம் தேதி வரை பரகோடி கண்டன் சாஸ்தா மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் அமைந்துள்ள, தெப்பக்குளத்தை தூய்மை படுத்தும் பணியினை மாணவர்கள் மேற்கொண்டனர்.
மேலும், பொய்கை குளம் மற்றும் குட்டி குளம் ஆகிய இரு குளங்களின் கரையோரத்தில் பொது மக்கள் காலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். எனவே பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று அக்குளங்களில் கரையோரத்தில் வளர்ந்திருந்த முட்செடிகளை அகற்றும் பணியை மேற்கொண்டனர்.
இந்த நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் கலைவாணன் தலைமை வகித்தார். ஆரல்வாய்மொழி பேரூராட்சி தலைவர் முத்துக்குமார் பணியினை தொடங்கி வைத்தார். நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் பேராசிரியர் முனைவர் சுபாகரன் இப்பணியை ஒருங்கிணைத்தார்.
The post ஆரல்வாய்மொழியில் அண்ணா கல்லூரி என்எஸ்எஸ் மாணவர்கள் தூய்மை பணி appeared first on Dinakaran.