கும்மிடிப்பூண்டி: ஆரம்பாக்கம் சோதனைச்சாவடியில் கன்டெய்னர் லாரி பாக்ஸ் தனியே கழன்று விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக ஆந்திர எல்லையில் ஆரம்பாக்கம் காவல் நிலையம் உள்ளது. இந்த காவல் நிலையத்தை ஒட்டி சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை உள்ள நிலையில், அங்கு ஆரம்பாக்கம் போலீசார் சோதனைச்சாவடி அமைத்து பல்வேறு வெளிமாநிலையிலிருந்து வரும் லாரிகளை சோதனை செய்து அனுப்புகின்றனர்.
இந்த நிலையில் வழக்கம்போல் நேற்று மதியம் 1 மணியளவில் ஆரம்பாக்கம் போலீசார் சோதனைச்சாவடியையொட்டி சோதனையில் ஈடுபட்டபோது, கன்டெய்னர் லாரி ஒன்று பிளைவுட் ஏற்றிக்கொண்டு நாயுடுபேட்டையில் இருந்து சென்னை செல்வதற்காக ஆரம்பாக்கம் சோதனைச்சாவடியை கடந்தது. அப்போது டிரைவரின் ஸ்டயரிங் போல்ட் கட்டானதால் நிலதடுமாறி கன்டெய்னர் தாறுமாறாக சாலையில் ஓடியது. அப்போது சோதனைச்சாவடி அருகே லாரி கண்டெய்னர் திடீரென தனியாக கழன்று கீழே விழுந்தது.
இதனால் வெடிகுண்டு வெடித்ததுபோல் பெரும் சத்தம் ஏற்பட்டது. ஆரம்பாக்கம் பஜாரில் உள்ள வியாபாரிகள் அலறியடித்துக் கொண்டு ஓடி வந்தனர். இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து ஆரம்பாக்கம் போலீசார் சாலையில் விழுந்த கண்டய்னரை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
The post ஆரம்பாக்கம் சோதனைச்சாவடியில் கன்டெய்னர் லாரி பாக்ஸ் தனியே கழன்று விழுந்ததால் பரபரப்பு appeared first on Dinakaran.