ஆரம்ப சுகாதார நிலையம் வேண்டும்: ராதானூர் கிராமமக்கள் கோரிக்கை

2 months ago 10

 

ராமநாதபுரம்,பிப்.18: ராதானூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க கோரி, கலெக்டரிடம் கிராம மக்கள் மனு அளித்தனர். ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஆர்.எஸ்.மங்கலம் அருகே ராதானூர் கிராமமக்கள் துணை ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க கோரி கலெக்டரிடம் மனு அளித்தனர்.

ராதானூர் கிராமத்தினர் கூறும்போது, ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றியம், மேலக்கோட்டை அருகே உள்ள ராதானூர் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. விவசாயம் மற்றும் நூறுநாள் வேலை உள்ளிட்ட கிடைக்கின்ற கூலி வேலைகளை செய்து வருகிறோம்.  இந்த நிலையில் இங்கு இயங்கி வந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டிடம் சேதமடைந்ததால் கடந்த 7 வருடத்திற்கு முன்பு இடித்து அகற்றப்பட்டது.

இதனால் பரிசோதனை, சிகிச்சை பெற சுமார் 6 கிலோ மீட்டர் உள்ள ஆனந்தூர் அரசு ஆரம்ப மருத்துவமனைக்கு சென்று வருகிறோம். இதனால் கர்ப்பிணி பெண்கள், முதியோர் சிரமப்படும் நிலை உள்ளது. எனவே ராதானூரில் மீண்டும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

The post ஆரம்ப சுகாதார நிலையம் வேண்டும்: ராதானூர் கிராமமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article