, மே 16: ஆரணி அடுத்த எஸ்யு வனம் ஊராட்சியில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் பழுதடைந்ததால், அதனை அகற்றி புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டிதரகோரி ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இதையடுத்து 2024-2025ம் ஆண்டு அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.31.40 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும் எஸ்.யு.வனம் ஊராட்சியில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டும் பணிகளுக்கு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியில், ஆரணி எம்எல்ஏ சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கலந்துகொண்டு ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டிடம் கட்டும் பணியை பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். அப்போது, முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர்கள் குமரன், ஜெயபிரகாஷ், முன்னாள் நகர கூட்டுறவு வங்கி தலைவர் அசோக்குமார், நகர மன்ற உறுப்பினர்கள் மோகன், குமரன் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
The post ஆரணிஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டும் பணிக்கு எம்எல்ஏ பூமி பூஜை எஸ்யு வனம் ஊராட்சியில் appeared first on Dinakaran.