ஆயுத பூஜையை முன்னிட்டு சிறப்பு சந்தை ஆலோசனை கூட்டம்

3 months ago 23

அண்ணாநகர்: கோயம்பேடு மார்க்கெட்டில் ஆயுத பூஜையை முன்னிட்டு சிறப்பு சந்தை நடத்துவது குறித்து அனைத்து வியாபாரிகளுடன் ஆலோசனை கூட்டம், அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் இந்துமதி தலைமையில் நேற்று நடந்தது. இதில், ஆயுத பூஜை சிறப்பு சந்தையில் மக்கள் சிரமமின்றி பொருட்களை வாங்கி செல்ல ஏற்பாடு செய்வது, போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையிலும், சட்டம், ஒழுங்கு பாதுகாப்பு குறித்தும் விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் போக்குவரத்து உதவி ஆணையர் ரவி, எஸ்.பி.சுந்தரம், கோயம்பேடு மார்க்கெட் கூட்டமைப்பு அனைத்து வியாபாரிகளின் தலைவர் ராஜசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

The post ஆயுத பூஜையை முன்னிட்டு சிறப்பு சந்தை ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article