ஆயுத பூஜை: ஞாயிறு அட்டவணைப்படி நாளை மின்சார ரெயில்கள் இயக்கம்

5 months ago 35

சென்னை,

ஆயுதபூஜை தொடர் விடுமுறையையொட்டி, ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்து வருகின்றனர். இதற்காக சிறப்பு பேருந்துகள், ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இதற்கிடையே, நாளை விடுமுறை தினம் என்பதால், சென்னையில் மின்சார ரெயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணம், கும்மிடிப்பூண்டி, சூலூர், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளுக்கு இயக்கப்படும் புறநகர் ரெயில்களும் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் எனவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  

Read Entire Article