உக்ரைனின் நட்பு நாடுகள் மற்றும் ராணுவ உதவி அளிக்கும் நாடுகளுக்கான ஆயுத ஏற்றுமதிக்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயுமாறு பாதுகாப்புத் துறை அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ளதாக அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.
ரஷ்யப் போரின் வெற்றித் திட்டம் குறித்து மேற்கத்திய நாடுகளின் தலைவர்களுடன் விவாதித்த நிலையில், அது தொடர்பான தகவல்களுடன் அமெரிக்கக் குழு விரைவில் உக்ரைன் வரும் என்றும் அவர் தெரிவித்தார்.
ரஷ்யாவுடன் போர் தொடங்கிய பிறகு ஆயுத ஏற்றுமதிக்கு ஜெலன்ஸ்கி தடை விதித்ததுடன், ஆயுத உற்பத்தியை அதிகரிக்கவும் உத்தரவிட்டார்.
அதன்காரணமாக, ஒட்டுமொத்த ஆயுத உற்பத்தி மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.