ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்களின் உயிருக்கு ஆபத்து: நீதிமன்றத்தில் அரசு தரப்பு வழக்கறிஞர் தகவல்

4 months ago 10

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்களின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளார். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள் குறித்து அறிக்கை அளிக்க காவல்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக பதவி வகித்த ஆம்ஸ்ட்ராங்கை ஒரு கும்பல் கடந்தாண்டு ஜூலையில் படுகொலை செய்தது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் மீதான குண்டர் தடுப்புச்சட்டத்தை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் பி.குமரேசன் கூறும்போது, இந்த வழக்கில் மொத்தம் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Read Entire Article