ஆம்பூர்: மாதனூர் ஊராட்சி ஒன்றியம் துத்திபட்டு ஊராட்சியில் உள்ள அம்பேத்கர் நகரில் ஊராட்சி ஒன்றிய துவக்கபள்ளி, அங்கன் வாடி மையம் ஆகியவை செயல்பட்டு வருகிறது. மழை நீர் இந்த பள்ளி முன்பாக தேங்கி மாணவ, மாணவியர், அவர்களது பெற்றோர் உள்ளிட்டோர் சேறும் சகதியுமாக உள்ள இடத்தில் நடந்து செல்ல இயலாத நிலை இருந்து வந்தது. அப்பகுதியில் கடந்த இரு நாட்களுக்கு முன்னர் மாதனூர் ஒன்றிய குழு தலைவர் சுரேஷ்குமார் ஆய்வு மேற்கொண்டு மண் கொட்டி சீரமைக்க அறிவுறுத்தினார். இதை தொடர்ந்து ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் அந்த இடம் உள்பட சேறு நிரம்பி உள்ள சாலைகளில் தற்காலிகாக மண் கொட்டி சீரமைக்கும் பணி நேற்று துவங்கியது.
இந்த பணிகளை ஊராட்சி தலைவர் சுவிதா கணேஷ், துணை தலைவர் பாலகிருஷ்ணன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும், வடகிழக்கு பருவ மழை மற்றும் டெங்கு நோய் தடுப்பு மருத்துவ முகாமில் பணியாற்றிய ஊராட்சியை சார்ந்த துப்புரவு மற்றும் தூய்மை மற்றும் இதர பணியாளர்களுக்கு ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் மாதனூர் துணை பிடிஓ ஈஸ்வரி, ஊராட்சி தலைவர் சுவிதா கணேஷ் ஆகியோர் பிரியாணி உள்ளிட்ட உணவு பொருட்களை வழங்கினர்.
The post ஆம்பூர் அருகே சேறும் சகதியுமாக இருந்த துவக்கப்பள்ளி வளாகம் மண் கொட்டி சீரமைப்பு appeared first on Dinakaran.