ஆம்புலன்ஸ் தாமதத்தால் கிராம மக்கள் ரகளை

2 weeks ago 4

ேவப்பனஹள்ளி, ஜன.14: கர்நாடக மாநிலம், கனுமனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் மகன்கள் சபரி(17), ராக்கி(17) இவர்களது நண்பர் ராம்சரன்(15). அங்குள்ள பள்ளியில் படித்து வரும் இவர்கள், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அருகே தடதாரை கிராமத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற எருதாட்டம் முன்னோட்டத்தை பார்ப்பதற்காக வந்திருந்தனர். விழா முடிந்ததும் பைக்கில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். வேப்பனஹள்ளி பகுதியில் டூவீலர் ஷோரும் அருகே சென்றபோது முன்னால் சென்று கொண்டிருந்த வாகனத்தை முந்த முயன்றனர். அப்போது, எதிரே கிருஷ்ணகிரி நோக்கி வந்த டவுன் பஸ் மீது பைக் மோதியது. இதில், சபரி உள்பட 2 பேர் படுகாயமடைந்தனர். கால்கள் முறிந்து வலியால் துடித்த அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு தகவல் தெரிவித்தனர். சுமார் ஒரு மணி நேரமாகியும் ஆம்புலன்ஸ் வராததால் அங்கிருந்தவர்கள் போலீசாருடன் வாக்குவாதம் செய்து, ரகளையில் ஈடுபட்டனர். இதையடுத்து, ஒரு வழியாக ஆம்புலன்ஸ் வந்து சேர்ந்தது. அதில், காயமடைந்தவர்களை ஏற்றி கிருஷ்ணகிரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வேப்பனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post ஆம்புலன்ஸ் தாமதத்தால் கிராம மக்கள் ரகளை appeared first on Dinakaran.

Read Entire Article