சென்னை: எந்த பிரச்சினையும் இல்லாமல் அரசு விரைவு பேருந்துகளில் மக்கள் பயணம் செய்கின்றனர் என அமைச்சர் சிவசங்கர் பேட்டி அளித்துள்ளார். சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்த பின்னர் அமைச்சர் சிவசங்கர் பேட்டி அளித்துள்ளார். உலகம் முழுவதும் தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளது. இதனிடையே, தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு வருகின்றனர். சொந்த ஊர் செல்லும் மக்களின் வசதிக்காக சென்னையில் இருந்து தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. சென்னையில் இருந்து மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல கேளம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு சென்று அங்கிருந்து சிறப்பு பஸ்கள் மூலம் புறப்பட்டு செல்கின்றனர்.
இந்நிலையில், கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் ஆய்வு மேற்கொண்டார். கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு மேற்கொள்ளப்பட்டுள்ள வசதிகளை பார்வையிட்ட அவர், பேருந்தில் ஏறி ஆய்வுகளை மேற்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் பேசியதாவது; அரசுப் பேருந்துகளில் கடந்த ஆண்டை விட 40 ஆயிரம் பேர் அதிகமாக முன்பதிவு செய்துள்ளனர். தீபாவளியை முன்னிட்டு நடப்பாண்டு அரசுப் பேருந்துகளில் 1.50 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக எந்த புகாரும் வரவில்லை என அவர் தெரிவித்தார்.
The post ஆம்னி பேருந்து குறித்து எந்த புகாரும் வரவில்லை; அரசுப் பேருந்துகளில் கடந்த ஆண்டை விட 40 ஆயிரம் பேர் அதிகமாக முன்பதிவு: அமைச்சர் சிவசங்கர் பேட்டி appeared first on Dinakaran.