ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ. சுட்டு படுகொலை

3 hours ago 4

லூதியானா,

ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தவர் குர்பிரீத் கோகி பஸ்ஸி. லூதியானா மேற்கு தொகுதி எம்.எல்.ஏ.வான இவர் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டு உள்ளார்.

இந்த சம்பவம் பற்றி இணை காவல் ஆணையாளர் ஜஸ்கரன் சிங் தேஜா கூறும்போது, துப்பாக்கி குண்டு காயங்களுடன் கோகி கிடந்துள்ளார். அவர் டி.எம்.சி. மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது, உயிரிழந்து விட்டார் என டாக்டர்கள் தெரிவித்து விட்டனர் என்றார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும், காவல் ஆணையாளர் குல்தீப் சஹால் மற்றும் காவல் துணை ஆணையாளர் ஜிதேந்திரா ஜோர்வால் ஆகியோரும் மருத்துவமனைக்கு நேரில் சென்றனர். கோகிக்கு மனைவி, மகன் மற்றும் மகள் உள்ளனர். 2 முறை கவுன்சிலராக இருந்த கோகி, 2022-ம் ஆண்டு எம்.எல்.ஏ.வானார்.

Read Entire Article