புலவயோ: ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் சென்றுள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி, புலவயோ நகரில் முதல் டெஸ்டில் ஆடி வருகிறது. நேற்று முன்தினம் முதல் இன்னிங்சை துவக்கிய ஜிம்பாப்வே ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 363 ரன் குவித்தது. சீன் வில்லியம்ஸ் அற்புதமாக ஆடி 145 ரன் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். இந்நிலையில் நேற்று 2ம் நாள் ஆட்டம் தொடர்ந்தது. 5வது விக்கெட்டாக சீன் வில்லியம்ஸ் 154 ரன்னுக்கு அவுட்டானார். அதன் பின் வந்தோரில் கேப்டன் கிரேக் எர்வின் 104, பிரையன் பென்னட் அவுட்டாகாமல் 110 ரன் குவித்தனர். 135.2 ஓவர் முடிவில் எல்லா விக்கெட்டுகளையும் இழந்த ஜிம்பாப்வே 586 ரன் குவித்து வலுவான நிலையில் இருந்தது. அதைத் தொடர்ந்து முதல் இன்னிங்சை ஆடிய ஆப்கானிஸ்தான், ஆட்ட நேர இறுதியில் 30 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 95 ரன் எடுத்திருந்தது.
The post ஆப்கனுடன் முதல் டெஸ்ட்: மூவர் சதம்; ஜிம்பாப்வே 586 appeared first on Dinakaran.