ஆன்லைன் மோசடியில் ரூ. 1.50 லட்சத்தை இழந்த இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை

1 day ago 1

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் சஹரன்பூர் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ராணி (வயது 26). இவருக்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. விரைவில் திருமணம் நடைபெற உள்ளது.

இந்நிலையில், ராணிக்கு கடந்த சில நாட்களுக்குமுன் ஆன்லைன் லாட்டரியில் 42 லட்ச ரூபாய் பரிசு கிடைத்துள்ளதாக மெசேஜ் வந்துள்ளது. 42 லட்ச ரூபாய் பரிசு தொகையை பெறவேண்டுமானால் வரி தொகையாக 1.50 லட்ச ரூபாய் முன்பணம் செலுத்த வேண்டுமென ஆன்லைன் மூலம் மெசேஜ் வந்துள்ளது.

அந்த மெசேஜை நம்பிய ராணி தனது வங்கி கணக்கில் சேமித்து வைத்திருந்த பணம், உறவினர்கள், பக்கத்து வீட்டுக்காரர்களிடம் கடன் வாங்கி ரூ. 1.50 லட்சம் பணத்தை மெசேஜ் வந்த லிங்கில் செலுத்தியுள்ளார். அப்போது, 42 ஆயிரம் ரூபாய் செலுத்தியதற்கான ரசீது மெசேஜில் வந்துள்ளது.

இதையடுத்து லாட்டரி தொகையான ரூ. 42 லட்சம் வந்துவிடும் என அவர் நம்பியுள்ளார். பின்னர், ஓரிரு நாட்கள் கழித்து தனது வங்கி கணக்கை பார்த்துள்ளார். அதில், லாட்டரி தொகையான 42 லட்ச ரூபாய் வரவு வைக்கப்படவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த ராணி தான் ஆன்லைன் மோசடியில் ஏமாற்றப்பட்டதை உணர்த்துள்ளார். 1.50 லட்ச ரூபாய் இழந்ததால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த ராணி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் தற்கொலை செய்துகொண்ட ராணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Entire Article