ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டு வந்த நபர் கைது: 9 முக்கிய ஆவணங்கள் பறிமுதல்

3 weeks ago 6

சென்னை: சென்னை காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில் காவல் கூடுதல் ஆணையாளர்கள் தெற்கு மற்றும் வடக்கு தலைமையின் கீழ் சைபர் கிரைம் தொடர்பான புகார்களை முறையே பெற்று உடனடி நடவடிக்கை எடுத்து சைபர் குற்றங்களால் பாதிக்கப்படுவோரின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக இழந்த பணத்தை மீட்டு தரவும், அடையாளம் தெரியாத இணைய வழி குற்றவாளிகளை அடையாளம் கண்டு முழுமையான விசாரணை மூலம் மேற்கண்ட குற்றங்கள் நடைபெறா வண்ணம் எதிரிகளுக்கு உரிய நீதிமன்றம் மூலம் தண்டனையை உறுதிப்படுத்த சென்னை பெருநகர வடக்கு மேற்கு, கிழக்கு மற்றும் தெற்கு ஆகிய 4 காவல் மண்டல இணை ஆணையாளர்கள் நேரடி மேற்பார்வையில் சைபர் கிரைம் குற்றப்பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சென்னை பெருநகர காவல், கிழக்கு மண்டல சைபர் கிரைம் காவல் நிலையத்தில் கடந்த 27.02.2025 அன்று கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த சஜித், பெ/வ 55, த/பெ.ஹபிப் என்பவர் அளித்த புகாரில் மனுதாரரின் Whatsapp க்கு Trading சம்பந்தமாக Link இணைந்த குறுஞ்செய்தி வந்ததாகவும், மனுதாரர் அந்த Link ஐ கிளிக் செய்தவுடன் அது “StackanalysisAl” என்ற ID ல் இணைந்ததாகவும் அதன் மூலம் மனுதாரரை தொடர்பு கொண்ட அடையாளம் தெரியாத நபர் முதலீடு செய்து அதிக லாபம் பெறலாம் என்று கூறியதை நம்பி அடையாளம் தெரியாத நபர் கூறிய வங்கி கணக்குகளுக்கு பல்வேறு தவணைகளாக மொத்தம் ரூபாய். 17,10,000/- அனுப்பியதாகவும், பின்னர் மனுதாரர் தான் பெற்ற லாப தொகையை பெற முடியாததால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து அடையாளம் தெரியாத நபர் மீது நடவடிக்கை மேற்கொண்டு இழந்த பணத்தை மீட்டுத் தருமாறு அளித்த புகார் மற்றும்

கடந்த 13.02.2025 ம் தேதி அயனாவரத்தைச் சேர்ந்த சித்ரா, பெ/வ 44, த/பெ. ராமசாமி என்பவர் அளித்த புகாரில் +917415701093 என்ற Whatsapp எண்ணிலிருந்து Trading சம்பந்தமாக Link இணைந்த குறுஞ்செய்தி வந்ததாகவும், மனுதாரர் அந்த Link ஐ கிளிக் செய்தவுடன் அது Whatsapp Group ல் இணைந்ததாகவும், அதன் மூலம் மனுதாரரை தொடர்பு கொண்ட அடையாளம் தெரியாத நபர் முதலீடு செய்து அதிக லாபம் பெறலாம் என்று கூறியதை நம்பி அடையாளம் தெரியாத நபர் கூறிய வங்கி கணக்குகளுக்கு பல்வேறு தவணைகளாக மொத்தம் ரூபாய் 4,58,753/-அனுப்பியதாகவும், பின்னர் மனுதாரர் பணத்தை எடுக்க முயற்சித்த போது அடையாளம் தெரியாத நபர் மேலும் ஐந்து லட்சம் பணம் அனுப்புமாறு கூறியதால், மனுதாரர் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து அடையாளம் தெரியாத நபர் மீது நடவடிக்கை மேற்கொண்டு இழந்த பணத்தை மீட்டுத் தருமாறு கொடுத்த புகார்களின் மீது கிழக்கு மண்டல சைபர் கிரைம் காவல் நிலையத்தில் மனு ரசீதுகள் பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் மேல் நடவடிக்கைக்காக BNS, BNSS மற்றும் I.T. (Amendment) Act 2008 ஆகிய சட்டப்பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

புலன் விசாரணையில் இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளி பயன்படுத்திய வங்கிக் கணக்கின் விபரங்கள் Mail ID, Phone Number ஆகியவற்றின் IP விபரங்கள் மற்றும் அதன் Network User Id முகவரி ஆகியவை பெறப்பட்டு விசாரணை மேற்கொண்டதில், இவ்வழக்கில் தொடர்புடைய குற்றவாளி பற்றிய விபரம் தெரிய வந்தது. அதன் அடிப்படையில் கனம் கூடுதல் காவல் ஆணையாளர் (சென்னை தெற்கு) மற்றும் சென்னை கிழக்கு மண்டல காவல் இணை ஆணையாளர் உத்தரவின் பேரில் மேற்படி குற்றவாளியை பிடிக்க கிழக்கு மண்டல சைபர் கிரைம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு வழக்கின் குற்றவாளியான கலையரசன், M/A 40, த/பெ.மணி என்பவரை நேற்று (02.05.2025) விழுப்புரம் மாவட்டம் வெள்ளையம்பட்டு என்ற இடத்தில் வைத்து கைது செய்து, இந்த வழக்கின் குற்றத்திற்கு பயன்படுத்திய Vivo Mobile Phone – 01, Sim Cards – 08, Bank Passbook 02, Cheque Book 01, Debit Cards – 09 ஆகிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. கைது செய்யப்பட்ட குற்றவாளி கலையரசன், விசாரணைக்கு, பின்னர் நேற்று (02.05.2025) நீதிமன்றத்தில் அஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

The post ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டு வந்த நபர் கைது: 9 முக்கிய ஆவணங்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Read Entire Article