ஆன்லைனில் அதிகரிக்கும் மோசடிகள்

3 months ago 8

 

திண்டுக்கல், பிப்.17: மொபைல் போனுக்கு வரும் மெசேஜ், லிங்க் மற்றும் சமூக வலைத்தளங்களில் வரும் விளம்பரங்கள் மூலம் பல லட்சம் ரூபாய் பணத்தை இழப்பதாக தொடர்ந்து புகார் வருவதால் சைபர் கிரைம் வழக்குகள் அதிகரித்து வருகின்றன. இது குறித்து போலீசார் கூறுகையில், ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்குவது உள்ளிட்ட அனைத்திலும் விழிப்புடன் இருக்க வேண்டும்.

ஏடிஎம் குறித்த விபரங்கள் கேட்டால், அது குறித்து நேரடியாக வங்கிக்கு சென்று தெரியப்படுத்துகிறோம் என போனை துண்டிக்க வேண்டும். மேலும் வங்கியில் இருந்து எந்த விபரமும் கேட்கப்படுவதில்லை என தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வருகிறது. போனுக்கு வரும் மெசேஜ் மூலம் தேவையற்ற லிங்க்களை திறக்கக்கூடாது. பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும், என்றனர்.

The post ஆன்லைனில் அதிகரிக்கும் மோசடிகள் appeared first on Dinakaran.

Read Entire Article