திருமலை: இஸ்லாமியர்களின் புனித ரமலான் பண்டிகை வரும் மார்ச் 31ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி மார்ச் 2ம்தேதி முதல் நோன்பு தொடங்குகிறது. எனவே அரசு அலுவலகங்களில் பணியாற்றும் இஸ்லாமிய ஊழியர்கள் ரமலான் மாத தொடக்கத்தில் இருந்து 1 மணி நேரம் முன்னதாகவே பணியை முடித்துக்கொண்டு செல்லலாம் என ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.
வரும் மார்ச் 2ம்தேதி முதல் மார்ச் 30ம்தேதி வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அனைத்து அரசுத்துறைகளிலும் பணிபுரியும் இஸ்லாமிய ஊழியர்களுக்கு பொருந்தும். ரமலான் மாதத்தில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் இப்தார் விருந்துக்கு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், ஊழியர்களின் வழிபாடு பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post ஆந்திராவில் மார்ச் 2ம்தேதி முதல் ரமலான் நோன்பு இஸ்லாமிய அரசு ஊழியர்கள் 1 மணி நேரம் முன்னதாக செல்ல அனுமதி appeared first on Dinakaran.