அமராவதி,
ஆந்திர பிரதேச மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள மதுபடா என்ற பகுதி அருகே தேசிய நெடுஞ்சாலையில், ஒடிசா மாநிலத்தில் இருந்து வந்து கொண்டிருந்த பேருந்து ஒன்று சாலையோரம் நின்றிருந்த டிரக் மீது எதிர்பாராத விதமாக மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 8 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.