பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது: தேனி மாவட்டத்தில் நறுமணப் பொருட்கள், நாமக்கல் மாவட்டத்தில் முட்டை உணவு சார்ந்த பொருட்கள், இராமநாதபுரம் மாவட்டம்-பரமக்குடியில் மின்கடத்தி உபகரணங்கள், தஞ்சாவூர் மாவட்டத்தில் கைவினைப் பொருட்கள் மற்றும் சென்னையில் பொறியியல் உற்பத்திப் பொருட்கள் உள்ளிட்ட குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் குழுமங்களின் தரம் மற்றும் உற்பத்தித் திறனை மேம்படுத்தி சந்தைப்படுத்திடவும், ஏற்றுமதி வாய்ப்புகளை உருவாக்கிடவும் ரூ. 50 கோடியில் பொது வசதி மையங்கள் மற்றும் இதர வசதிகள் உருவாக்கப்படும்.
அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ், திட்ட மதிப்பீட்டில் 35 சதவிதம் மூலதன மானியம் மற்றும் 6 சதவீதம் வட்டி மானியம் 10 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது. இத்திட்டம் தொடங்கப்பட்டது முதல் இதுவரை, 2,386 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில்முனைவோர்களுக்கு ரூ. 259 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது. 2025-26 ஆண்டில் இத்திட்டத்தைச் செயல்படுத்த ரூ. 170 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
The post ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில்முனைவோர்கள்: 2025-26 ஆண்டில் ரூ.170 கோடி நிதி ஒதுக்கீடு appeared first on Dinakaran.