ஆதிதிராவிடர் நலக்குழு ஆலோசனை கூட்டம்

7 months ago 24

அரூர், நவ.15: ஒருங்கிணைந்த தர்மபுரி மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு ஆலோசனை கூட்டம், தர்மபுரியில் நேற்று நடந்தது. கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் தடங்கம் சுப்பிரமணி தலைமையில், வக்கீல் ஆ.மணி எம்பி., முன்னிலை வகித்தார். இதில் உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் கலந்து கொண்டு, பல்வேறு ஆலோசனைகள் வழங்கி பேசினார். இக்கூட்டத்தில் ஆதிதிராவிடர் நலக்குழு மாநில துணை செயலாளர் ராஜேந்திரன், வர்த்தக அணி துணை செயலாளர் சத்தியமூர்த்தி, முன்னாள் எம்எல்ஏ வேடம்மாள் மற்றும் மேற்கு மாவட்ட அமைப்பாளர் அக்ரி.திருமால், ஒருங்கிணைந்த மாவட்ட ஆதிதிராவிட நலக்குழு தலைவர், துணைத்தலைவர், மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

The post ஆதிதிராவிடர் நலக்குழு ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article