புதுடெல்லி: ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டை விவரத்தை இணைப்பது தொடர்பாக உள்துறை செயலாளருடன் ஆலோசனைக் கூட்டத்தை கூட்டியுள்ளார் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார். வரும் 18-ம் தேதி இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
நாடு முழுவதும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதை கட்டாயமாக்கும் நடவடிக்கைகளில் இந்திய தேர்தல் ஆணையம் இறங்கி உள்ளது. அதன் ஒரு பகுதியாகவே இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுவதாகத் தெரிகிறது.