ஆதவ் அர்ஜுனா கட்சிப் பொறுப்பில் தான் இருக்கிறார்: திருமாவளவன்

6 months ago 21

சென்னை,

சென்னையில் நேற்று 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' என்ற புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், விடுதலை சிறுத்தைகள் துணைப்பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா உள்பட பலர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய ஆதவ் அர்ஜுனா, தமிழகத்தில் மன்னராட்சி நடைபெறுகிறது. பிறப்பால் அனைவரும் சமம் என்ற கருத்தியலை அம்பேத்கர் உருவாக்கியதுபோல், பிறப்பால் இனி ஒருவர் முதல்-அமைச்சர் ஆகக்கூடாது. இனி தமிழகத்தை ஆள வேண்டுமானால் ஒரு கருத்தியல் தலைவர்தான் ஆளவேண்டும். தமிழக மக்கள் புதிய அரசியலை உருவாக்க முடிவெடுத்துவிட்டனர். தமிழகத்தில் இனி மன்னராட்சிக்கு ஒருபோதும் இடமில்லை' என்றார்.

இதனிடையே, தமிழகத்தில் மன்னராட்சி நடைபெறுவதாக ஆதவ் அர்ஜுனா பேசிய கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன. ஆதவ் அர்ஜுனா மீது விடுதலை சிறுத்தைகள் கட்சி ரீதியில் நடவடிக்கை எடுக்கலாம் என தகவல் வெளியாகின. அவர் கட்சியில் இருந்து நீக்கப்படலாம் எனவும் தகவல்கள் பரவி வருகின்றன.

இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,

விஜய் பங்கேற்ற அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் ஆதவ் அர்ஜுனாவை பங்கேற்க சொன்னதே நான்தான். விடுதலை சிறுத்தைகள் கட்சியில் தலித் அல்லாதோர் உள்பட 10 பேர் துணை பொதுச்செயலாளர்களாக உள்ளனர்.

ஆதவ் அர்ஜுனா விடுதலை சிறுத்தைகள் கட்சி பொறுப்பில் தான் இருக்கிறார். அவர் கட்சியுடன் தொடர்பிலும் இருக்கிறார். திமுக, அதிமுகவை போன்று விசிகவும் செயல்படவேண்டும் என்பது ஏற்புடையதல்ல. ஒருமுறைக்கு இருமுறை பரிசீலித்த பிறகே ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவு எடுக்கப்படும்' என்றார்.

Read Entire Article