தஞ்சாவூர், மே 15: தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சார்பில் செவிலியர் தின விழிப்புணர்வு பேரணியை தஞ்சை மருத்துவக் கல்லூரி முதல்வர் பொறுப்பு பாலசுப்பிரமணியன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சார்பில் செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது. இந்த தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணிக்கு மருத்துவமனை செவிலியர் கண்காணிப்பாளர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். மருத்துவக்கல்லூரி முதல்வர் (பொறுப்பு) பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கி கொடி அசைத்து செவிலியர் பேரணியை தொடங்கி வைத்தார். இந்த பேரணி தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செவிலியர் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து தொடங்கி பல்நோக்கு மருத்துவமனை வரை சென்றது. பின்னர் அனைத்து செவிலியர்களும் மெழுகுவர்த்தி ஏந்தி பிளாரென்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரின் உருவப் படத்தின் முன்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மருத்துவ கண்காணிப்பாளர் ராமசாமி, நிலைய மருத்துவ அலுவலர் செல்வம், உதவி நிலைய மருத்துவ அலுவலர் முகமது இஸ்திரிஸ், முத்து மகேஷ், செவிலியர் பயிற்சி பள்ளி முதல்வர் மகேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். இதில் மருத்துவக்கல்லூரி பேராசிரியர்கள், செவிலியர் கண்காணிப்பாளர்கள், செவிலியர்கள், செவிலிய பயிற்சி மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து செவிலியர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ரத்ததான முகாமில் ரத்த தானம் வழங்கிய கொடையாளர்கள், சிறப்பாக பணியாற்றிய செவிலியர்கள் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
The post ஆதவனின் கோபுர தரிசனம்; தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சார்பில் செவிலியர் தின விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.