புதுக்கோட்டை, மார்ச் 30: புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை அருகே கருப்புடையான் பட்டியில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் விவசாயிகளுக்கு கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக மின்சார பற்றாக்குறை இருந்ததாகவும் கூடுதல் மின்மாற்றி அமைக்க மின்வாரிய அதிகாரிகளிடம் விவசாயிகள் கோரிக்கை வைத்திருந்தனர். கோரிக்கையை ஏற்று கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு புதிய மின்மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு அதிலிருந்து விவசாயிகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 12 மணி அளவில் விவசாயிகள் தண்ணீர் பாய்ச்ச இரவு நேரம் சென்றதாக கூறப்படுகிறது அப்போது மின்சாரம் திடீரென துண்டிக்கப்பட்டு மீண்டும் வந்ததாகவும் கூறப்படுகிறது இருந்த போதும் விவசாயிகள் இதை எதார்த்தமாக எடுத்துக்கொண்டு இரவு முழுவதும் மின்சாரம் வரவில்லை இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் மின்மாற்றியை பீஸ் ஏதும் போய் உள்ளதா என அதிகாலை காலை 4 மணி அளவில் நேரில் சென்று பார்த்த போது புதிய மின் மாற்றி கீழே தள்ளப்பட்டு அதில் இருந்த காப்பர் வயர்கள் திருடப்பட்ட சம்பவம் அரங்கேறி இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து விவசாயிகள் பொதுமக்கள் உடனடியாக ஆதனக்கோட்டை மின் வாரிய அலுவலக அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர் தகவல் அறிந்த மின்வாரியத் துறை அதிகாரிகள் ஆதனக்கோட்டை காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர் சம்பவ இடத்துக்கு மின்வாரிய அதிகாரிகளும் காவல்துறையினரும் விரைந்து வந்து சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு நடத்தி விசாரணை செய்து வருகின்றனர். ஆனால் மின்சாரம் இன்றி விவசாயிகள் தவித்து வருகின்றனர். மின்மாற்றி உடைத்த மர்ம நபர்கள் மீது விரைந்து காவல்துறையினர் அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைக்கின்றனர்
The post ஆதனக்கோட்டை அருகே கருப்புடையான் பட்டியில் மின்மாற்றி வயர்கள் திருட்டு appeared first on Dinakaran.