கடலூர் மாவட்டம், சிதம்பரம் அடுத்த கொள்ளிடக்கரையில் தென்பகுதியில் வசித்து வந்த மக்கள் சிலர், விழுப்புரம் மாவட்டம், வானுார் அடுத்த நைனார்மண்டபம் கிராமத்தில் 100 ஆண்டுகளுக்கு முன் குடியேறினர். இந்த மக்கள் வினோதமான முறையில் பொங்கல் கொண்டாடுகின்றனர். அதாவது, அவர்களின் சமூகத்தின் பாரம்பரிய வழக்கப்படி ஆண்கள் மட்டும் அப்பகுதியில் உள்ள வெள்ளந்தாங்கி வீரனார் கோவில் குளக்கரையில் ஆண்டுதோறும் போகி பண்டிகைக்கு பொங்கலிட்டு வழிபடுகின்றனர். பொங்கல் தினத்தன்று வெள்ளந்தாங்கி அய்யனார் கோயிலில் ஒன்றுகூடி, 50க்கும் மேற்பட்ட பானைகளில் பொங்கலிட்டு இறைவனுக்கு படையலிடுகின்றனர். இந்நிகழ்வில் பெண்கள் யாரும் அனுமதிக்கப்படுவதில்லை.
மூதாதையர் பின்பற்றி வரும் இந்த பழக்கத்தை தலைமுறை தலைமுறையாக இப்போதும் கடைப்பிடிக்கின்றனர். இதனால் கிராமத்தில் விவசாயம், கால்நடைகள் மட்டுமல்லாது, தங்களது தலைமுறைகளும் தழைத்தோங்கும் என நைனார்மண்டபம் கிராம மக்கள் நம்புகின்றனர்.