ஆண்களுக்கும் இலவச பேருந்து பயணம் கிடைக்குமா? அமைச்சர் சிவசங்கர் பதில்

3 weeks ago 8

சென்னை,

தமிழகத்தில் கடந்த சட்டசபை தேர்தலின் போது திமுக தேர்தல் வாக்குறுதியாக பெண்களுக்கு பஸ்சில் இலவச பயண திட்டம் தொடங்கப்படும் என அறிவித்தது. இதனையடுத்து ஆட்சியை பிடித்த திமுக தனது வாக்குறுதியை நிறைவேற்றிடும் வகையில் பெண்களுக்கு இலவச பேருந்து பயண திட்டமான விடியல் பயணம் திட்டம் தொடங்கப்பட்டது.

இந்த திட்டத்தின் மூலம் தினமும் சராசரியாக 57.81 லட்சம் பெண்கள் பயன் அடைந்து வருகிறார்கள். மேலும் ஒவ்வொரு மாதமும் வேலைக்கு செல்லும் பெண்கள் இலவச பேருந்து பயணத்தின் மூலம் சுமார் 1000 ரூபாய் வரை சேமிக்க முடிகிறது என்று கூறி வருகின்றனர். எனவே இந்த திட்டம் தமிழக மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் மற்ற மாநிலங்களிலும் இந்த திட்டமானது செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே இந்த திட்டத்தை பெண்கள் மட்டும் பயனடையும் வகையில் இல்லாமல் ஆண்களும் பயனடையும் வகையில் விரிவாக்கம் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்துள்ளது. இதற்கு தமிழக அரசும் பதில் அளித்துள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் பேது பேசிய திருவாடனை சட்டமன்ற உறுப்பினர் கருமாணிக்கம், தொண்டி பகுதியில் பணிமனை அமைக்கும் செயக்குறிப்பு அரசிடம் உள்ளதா என்று கேள்வி எழுப்பினார். மேலும் பழைய பேருந்துகளை மாற்றி தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். மேலும், ஆண்களுக்கும் (இலவச பேருந்து பயணம்) விடியல் பயணம் அளிக்கபடுமா என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் சிவசங்கர், தொண்டி பகுதியில் பணிமனை அமைக்கும் செயக்குறிப்பு அரசின் பரிசீலனையில் உள்ளதாக பதில் அளித்தார்.

மேலும், ஆண்களுக்கும் இலவச பேருந்து பயணம் குறித்த ஆர்வம் வரவேற்கத்தக்கது. பெண்கள் ஒடுக்கப்பட்டவர்களாக இருந்தார்கள். இதனால் பெரியார் கொள்கைகளின் பெண்களை மேம்படுத்த இலவச பயணம் வழங்கப்படுகிறது. அரசின் நிதிநிலை சீராகும் பொழுது ஆண்களுக்கும் விடியல் பயணம் வழங்க பரிசீலிக்கப்படும் என்று பதில் அளித்தார்.

Read Entire Article