திருமலை: ஆந்திர மாநிலம் எலூரு அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 10ம் வகுப்பு மாணவி. நேற்று மாணவியை, அவரது பெற்றோர் கண்டித்ததாக தெரிகிறது. இதனால் கோபமடைந்த மாணவி வீட்டைவிட்டு வெளியேறி ஏலூரு பஸ் நிலையத்தில் அமர்ந்திருந்தாராம். நீண்ட நேரமாக மாணவி நள்ளிரவு வரை தனியாக அமர்ந்து கொண்டிருப்பதை பார்த்த ஒரு ஆட்டோ டிரைவர், மாணவியிடம் நைசாக பேச்சு கொடுத்துள்ாளர். பின்னர் மாணவிக்கு ஆதரவாக பேசுவதுபோல் நடித்து, வீட்டில் விட்டுவிடுவதாக கூறி ஆட்டோவில் அழைத்து சென்றுள்ளார். ஆனால் ஆட்டோ டிரைவர், மாணவியை அவரது வீட்டிற்கு அழைத்து செல்லாமல் ஏலூர் பொனாங்கி சாலையில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றாராம்.
இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி, அவரிடம் இருந்து தப்பித்து வெளியே வந்து கூச்சலிட்டுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த திருநங்கைகள் சிலர், மாணவியிடம் விசாரித்தனர். பின்னர் மாணவியை, அவரது பெற்றோரிடம் ஒப்படைத்து நடந்த விவரங்களை தெரிவித்தனர். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் ஏலூரு போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் மாணவிைய பலாத்காரம் செய்ய முயன்றது ஏலூர் பொனாங்கி சாலை பகுதியை சேர்ந்த பிரபாகர்ராஜு(40) என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து பிரபாகர்ராஜுவை கைது செய்தனர்.
The post ஆட்டோவில் அழைத்துச்சென்று மாணவியை பலாத்கார முயற்சி: டிரைவர் போக்சோவில் கைது appeared first on Dinakaran.