ஆசைவார்த்தை கூறி ரூ.10.32 லட்சம் மோசடி கேரள வாலிபர் சிக்கினார்

3 weeks ago 6

மங்களூரு: மங்களூருவில் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என ஆசைவார்த்தை கூறி ரூ.10.32 லட்சம் மோசடி செய்த கேரள மாநிலத்தை சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து மங்களூரு போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘கடந்த ஆண்டு மங்களூருவை சேர்ந்த ஒருவருக்கு போன் அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய மர்ம நபர்கள் பங்கு சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என கூறியுள்ளனர்.

இதை நம்பிய அவர், மர்மநபர்கள் கூறிய வங்கி கணக்கில் ரூ.10.32 லட்சம் அனுப்பியுள்ளார். பின்னர் அவர்களிடமிருந்து எந்த தகவலும் இல்லை. இதையடுத்து அவர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சைபர் எகனாமிக் மற்றும் போதைப்பொருள் (சிஇஎன்) குற்றப் பிரிவில் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். அதில் பல்வேறு கணக்குகளுக்கு நிதி பரிமாற்றப்பட்டுள்ளது.

அதன் விவரங்களை கொண்டு போலீசார் கேரளாவை ேசர்ந்தவர் மோசடியில் ஈடுபட்டதை உறுதி செய்தனர். தொடர்ந்து வங்கி கணக்கை பரிசோதித்ததில் மோசடியில் ஈடுபட்டவர் கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் செம்புசிரா பகுதியை சேர்ந்த நிதின் குமார் என தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் நீதிபதி முன் ஆஜர்படுத்தி, பின்னர் சிறையில் அடைத்தனர். மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மற்ற நபர்களைத் தேடும் பணி நடைபெற்று வருவதாக’ போலீசார் தெரிவித்தனர்.

The post ஆசைவார்த்தை கூறி ரூ.10.32 லட்சம் மோசடி கேரள வாலிபர் சிக்கினார் appeared first on Dinakaran.

Read Entire Article