ஆசிரியர் திட்டியதால் மாணவி தற்கொலை: போலீசார் விசாரணை

2 days ago 2

பல்லாவரம்: பல்லாவரத்தில் கணித ஆசிரியர் திட்டியதால், பிளஸ் 1 மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஈசா பல்லாவரம், யாசின்கான் 2வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் பரக்கத்துல்லா. பல்லாவரம் ரெங்கநாதன் தெருவில், காலணி கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது, மகள் ஷெரின்பர்கானா (16).,அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார்.

இந்நிலையில், நேற்று பரக்கத்துல்லா தனது கடைக்கு வியாபாரத்தை கவனிக்க சென்று விட்டார். அவரது மனைவியும் உடல்நிலை சரியில்லாததால் அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றிருந்தார். அப்போது, ஷெரின்பர்கானா மட்டும் வீட்டில் தனியாக இருந்ததாக கூறப்படுகிறது. வெளியில் சென்றவர்கள் வீடு திரும்பிய போது, ஷெரின்பர்கானா தூக்கில் தொங்கியது தெரிந்தது.
அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக அவரை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு, ஷெரின்பர்கானாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்த பல்லாவரம் போலீசார், விரைந்து வந்து, மாணவி ஷெரின்பர்கானாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மாணவி சரியாக பிடிக்காததால் கணித ஆசிரியர் திட்டியதாக கூறப்படுகிறது. அதன் காரணமாக மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதும் காரணமா என விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post ஆசிரியர் திட்டியதால் மாணவி தற்கொலை: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Read Entire Article