ஆசிய கலப்பு அணிகள் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: காலிறுதியில் இந்திய அணி தோல்வி

3 months ago 10

கியாங்டா,

ஆசிய கலப்பு அணிகளுக்கான பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவில் உள்ள கியாங்டாவில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் பங்கேற்றுள்ள 12 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடித்த அணிகள் காலிறுதிக்கு தகுதி பெற்றன. இதில் 'டி' பிரிவில் இடம் பெற்றிருந்த இந்திய அணி லீக் சுற்றில் தலா ஒரு வெற்றி மற்றும் தோல்வியுடன் காலிறுதிக்கு முன்னேறியது.

இதனையடுத்து இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் இந்திய அணி ஜப்பானை எதிர் கொண்டது. இதில் இந்தியா 0-3 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெளியேறியது.

கலப்பு இரட்டையர், பெண்கள் மற்றும் ஆண்கள் ஒற்றையர் என முதல் 3 போட்டிகளிலேயே இந்திய வீரர்கள் தோல்வியை சந்தித்ததால் ஜப்பான் எளிதில் வெற்றி பெற்றது.

Read Entire Article