அரியலூர், பிப்.18: அரியலூரிலுள்ள அனைத்துப் பகுதிகளிலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என மாவட்ட கலெக்டர் ரத்தினசாமியிடம், நகர பொது நல வளர்ச்சி சங்கத்தினர் நேற்று கோரிக்கை மனுவை அளித்தனர்.மனு விவரம்: அரியலூர் நகரில் கடந்த சில தினங்களாக சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது. ஆனால், ஓரிரு வாரங்களில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, முழுமையாக அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மேலும் நகர் முழுவதும் உள்ள அனைத்துத் தெருக்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை எடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி கலெக்டரிடம் மனு appeared first on Dinakaran.