ஆக்கிரமிப்பு வீடுகள் அளவீடு: அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதம்

1 month ago 6

பூந்தமல்லி: நீதிமன்ற வழக்கு தொடர்பாக மதுரவாயல் குடியிருப்பு ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்றுவதற்காக வந்த அதிகாரிகளை முற்றுகையிட்டு அப்பகுதி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சென்னை மதுரவாயல் ராஜிவ்காந்தி நகர் பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள் இப்பகுதியில் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிக்குச் செல்லக்கூடிய 40 அடி பாதை தற்போது குறுகி 20 அடி மட்டுமே உள்ளது. இதில் வீடுகள் கட்டி ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் பாதைகள் இல்லை எனக்கூறி அப்பாஸ் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கின் அடிப்படையில் மதுரவாயல் தாசில்தார் ஜெயக்குமார் தலைமையில் அதிகாரிகள் வீடுகளை அளவீடு செய்ய நேற்று வந்திருந்தனர். இதனை அறிந்த அந்தப் பகுதி மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் அதிகாரிகளை அளவீடு செய்ய விடாமல் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களிடம் மதுரவாயல் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை தொடர்ந்து, போலீசார் பாதுகாப்புடன் வீடுகளை அளவீடு செய்து அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

The post ஆக்கிரமிப்பு வீடுகள் அளவீடு: அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதம் appeared first on Dinakaran.

Read Entire Article