ஆக்கி இந்தியா லீக்: ஷூட் - அவுட்டில் சூர்மா கிளப் அணியை வீழ்த்தி ஐதராபாத் வெற்றி

3 hours ago 3

ரூர்கேலா,

6-வது ஆக்கி இந்தியா லீக் போட்டி ஒடிசாவின் ரூர்கேலாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் ஐதராபாத் டூபான்ஸ் - சூர்மா ஆக்கி கிளப் அணிகள் மோதின.

இரு அணிகளும் சரி சம பலத்துடன் மோதியதால் இந்த ஆட்டம் வழக்கமான நேர முடிவில் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. ஐதராபாத் தரப்பில் அமந்தீப் லக்ராவும், சூர்மா கிளப் தரப்பில் நிக்கோலசும் தலா 1 கோல் அடித்தனர். இதைத்தொடர்ந்து நடந்த ஷூட்-அவுட்டில் ஐதராபாத் 4-3 என்ற கோல் கணக்கில் சூர்மா அணியை தோற்கடித்து வெற்றி பெற்றது.

இதில் நேற்று நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் உ.பி. ருத்ராஸ் அணி 3-1 என்ற கோல் கணக்கில் டெல்லி எஸ்.ஜி. பைபர்சை வீழ்த்தியது.

இன்று நடைபெறும் ஆட்டத்தில் வேதாந்தா கலிங்கா லான்சர்ஸ் - ஐதராபாத் டூபான்ஸ் அணிகள் மோதுகின்றன.

Read Entire Article